Sunday 9 November 2014

அரச மரத்தடியில் துவங்கியது புதிய சங்கம்

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் இன்று திருத்தணி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக, ஆர்.கே.பேட்டை வட்டார ஆசிரியர் பயிற்றுனர் பழனி மற்றும் தொலைதொடர்பு துறை தியாகராஜன் கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றினர். 


அரசமரத்தடியில் நடந்த கூட்டத்திற்கு வந்து சிறப்பித்த சிறப்பு விருந்தனர்களுக்காக, அருகில் உள்ள மண்டபத்தில் சென்று இரண்டு இருக்கைகள் கடனாக பெற்று வந்து அமரச் செய்ய வேண்டிய தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. மிக எளிமையாக நடந்த கூட்டமானாலும், மிக சிறப்பாக நடந்தது. 
திரு. பழனி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட ஏளனங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு, தற்போது இந்த நிலைக்கு வந்தது குறித்து பேசினார். இதில் தன்னலம் துளியும் இல்லை. 4,000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து தான்,மாநில தற்காலிக உதவியாளர்கள் சங்கம் துவங்கி, அதன் மூலம் போராடி பெற்ற உரிமைகளை நினைவு கூர்ந்தார்.

மேலும், கடமையை செய்யுங்கள், பிரச்சனை வந்தால் அதை எதிர்கொள்ள நான் உதவுகிறேன் என்று கூறி சங்கம் அமைக்கவும் அதை இன்றே இ்பபோதே துவங்குங்கள் என்று கூறி, தலைவர் பொருளாளர் என, 20 பேரை தேர்வு செய்து நியமனம் செய்து வைத்தார். காலை 10:30 மணிக்கு துவங்கிய கூட்டம் பகல் 2:00 மணிக்கு நிறைவடைந்தது. வளமான எதிர்காலத்திற்கு முதல் படியை மிதித்த திருப்தியுடன் ஆசிரியர்கள் பிரிந்து சென்றனர்.

Wednesday 5 November 2014

EENADU NEWS ABOUT PT TEACHRES MEETING


அதே 5,000த்தில் நிலை கொண்டுள்ளது



www.facebook.com/computertrl

ஏழுமலை பாண்டியன்

https://www.facebook.com/groups/1478641355757447/


திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள்


பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம், பொதட்டூர்பேட்டையில் இன்று காலை நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தங்களின் உள்ள குமுறல்களை, வேதனையுடன் வெ ளிப்படுத்தினர். கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்த சம்பளதில் வேலை செய்துவரும் தாங்களுக்கு சம்பள உயர்வு இல்லை, பணி நிரந்தரம் இல்லை, பணியிட மாறுதல் மறுக்கப்படுகிறது என அடுக்கடுக்காக புகார்களை அடுக்கினர்.

மேலும், கடந்த மூன்று ஆண்டில், பால் விலை இரண்டு முறை, பஸ் கட்டணம் இரட்டிப்பு, பெட்ரோல் விலை பலமுறை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம் மட்டும் அதே 5,000த்தில் நிலை கொண்டுள்ளது. 

பகுதிநேர வேலை நிரந்தரமாகும் என்ற நம்பிக்கையில், தனியார் பள்ளி மற்றும் நிறுவனங்களில் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டுவந்து, தற்போது ஐந்தாயிரத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வருகிறோம்.


அட 100 நாள் வேலைக்காவது போகலாம் என்றால் அதற்கும் முடியாது. இப்படி உண்மையிலேயே வறுமைகோட்டிற்கு கீழே உள்ள எங்களை அரசாங்கம் என்றைக்கு கரையேற்றும் என கண்ணீர் சிந்தினர்.


அடுத்த கட்டமாக, வரும் 9ம் தேதி, திருத்தணி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் கூட்டம் நடத்தி, சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.