Friday 29 March 2013

திருவள்ளூர் மாவ்ட்ட பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் எஸ்.எஸ்.ஏ., தலைமையகத்தில் இன்று (30-03-2013) காலை 10 மணிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு ஓராண்டு கடந்துள்ளநிலையில், பணி நிரந்தரம், பாடதிட்டம், ஊதிய உயர்வு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கூட்டமைப்பு இல்லாததால், பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற ரீதியில், நமது கோரிக்கைகளை அரசு தெரியப்படுத்த தகுந்த வாய்ப்பு இல்லாமல் உள்ளது.

 கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இன்று நமது கூட்டம் நடக்க உள்ளது. அனைத்து பகுதி நேர ஆசிரியர்களும் கல்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

Friday 22 March 2013

பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

தமிழக அரசின் ஆணைப்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதிநேர கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி பாடம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி இது போன்ற பணியிடங்களுக்கு பதிவு மூப்பு, போட்டி தேர்வு அடிப்படையில் நிரப்புவது வழக்கம். இதில் கடந்த ஒரு ஆண்டுகளாக பள்ளியில் பகுதி நேர கணினி பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கேட்டு கொள்கிறோம் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thursday 14 March 2013

வரும் கல்வி ஆண்டில், நிரந்தரம்

காத்திருப்பு பட்டியலில் இருந்த பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த வாரம் நியமனம் செய்யப்பட்டனர். இதற்காக, ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. கணினி பகுதி நேர ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில், நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

Tuesday 5 March 2013

பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சேலத்தில் நடந்த விழாவில் செம்மலை எம்.பி., பேசினார். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி
அறிவிப்பு மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். பொருளாளர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பெரியசாமி வரவேற்றார்.
அதிமுக அமைப்பு செயலாளரும் எம்.பி.யுமான செம்மலை சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியது: தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போது இத்திட்டம் 2014ம் ஆண்டுடன் முடிந்து விடும். அதன்பின், பகுதி நேர ஆசிரியர்களுக்கு வேலை இருக்காது என எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
ஆனால் மத்திய அரசு, எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை 2017ம் ஆண்டு வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் யாரும் கவலைப்பட வேண்டும். அப்படியே, எஸ்.எஸ்.ஏ. திட்டம் நின்று போனாலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உங்களை தத்தெடுத்துக் கொள்ளும். பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது, பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு அரணாக இருப்பார்.
அதே நேரம், நீங்களும் உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதித்தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் என்பவரும் மாணவர்கள்தான். அதனால், ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட்டோம் என்பதற்காக படிப்பதை நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். மாணவர்கள் உங்களை பார்த்து கற்றுக் கொள்ளும் வகையில் நீங்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமித்து முதல்வர் உத்தரவிட்டார். இதில், சேலத்துக்கு 763 பணியிடங்கள் கிடைத்தது. சமீபத்தில் 1800 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், சேலத்துக்கு 77 பணியிடங்கள் கிடைத்தது. இந்த அரசு, ஆசிரியர்களுக்கு பக்கபலமாக இருக்கும். இவ்வாறு செம்மலை எம்.பி., பேசினார்.